கோடிகளிலும் லட்சங்களிலும் தவழும் யூடியூப் பிரீமியம் & டிவி

30 October 2020, 2:18 pm
YouTube Premium has 30 million subscribers, YouTube TV clocks 3 million
Quick Share

கூகிள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் யூடியூப் மியூசிக் / பிரீமியம் மற்றும் யூடியூப் டிவி சந்தாதாரர்களைப் பற்றிய புதுப்பிப்பை வெளியிட்டது. இப்போது, சமீபத்தில் ​​அதன் மூன்றாம் காலாண்டின் 2020 வருவாய் அறிவிப்புகளின் போது, ​​ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை  யூடியூப் மியூசிக் / பிரீமியம் மற்றும் யூடியூப் டிவி சந்தாதாரர்களைப் பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். 

தகவலின்படி, மியூசிக்-ஸ்ட்ரீமிங் சேவையில் இதுவரை 30 மில்லியன் (சுமார் 3 கோடி) கட்டண சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதாகவும், யூடியூப் டிவி சேவையில் மேலும் ஒரு மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்துள்ளதாகவும் 9to5Google தெரிவித்துள்ளது.

கூகிள் தனது 2019 நான்காம் காலாண்டில், வருவாய் அறிவிப்பின் போது யூடியூப் மியூசிக் / பிரீமியத்தில் 20 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், 2 மில்லியன் யூடியூப் டிவி சந்தாதாரர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களில், யூடியூப் டிவியின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 3 மில்லியன் (30 லட்சம்) ஆக வளர்ந்துள்ளது மற்றும் யூடியூப் மியூசிக் / பிரீமியம் தளத்தின் கட்டண சந்தாதாரர்களை இப்போது 30 மில்லியனாக ஆக உயர்ந்துள்ளது.

விளம்பரமில்லாத பிளேபேக், பின்னணி ஸ்ட்ரீமிங் மற்றும் ஆஃப்லைன் பதிவிறக்கங்களுக்கு யூடியூப் மியூசிக் பிரீமியம் $9.99 கட்டணம் வசூலிக்கிறது (இந்தியாவில் மாதம் ரூ.99). கூடுதல் $ 2 கட்டணத்துக்கு, YouTube மியூசிக் பிரீமியம் அந்த நன்மைகளை தளம் முழுவதும் உள்ள அனைத்து வீடியோ உள்ளடக்கங்களுக்கும் விரிவுபடுத்துகிறது. 2019 ஆண்டின் நடுப்பகுதியில் 60 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது.  அதே நேரத்தில் ஸ்பாட்ஃடிபை 113 மில்லியன் சந்தாதாரர்களுடன் முன்னிலை வகிக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 14

0

0

1 thought on “கோடிகளிலும் லட்சங்களிலும் தவழும் யூடியூப் பிரீமியம் & டிவி

Comments are closed.