ரூ.26,000 மதிப்பில் மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் Zepp Z ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!

19 July 2021, 12:30 pm
Zepp Z smartwatch launched in India
Quick Share

இந்திய சந்தையில் அமேஸ்ஃபிட்டின் மூன்று ஆண்டுகள் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் விதமாக ஹுவாமியின் துணை நிறுவனமும் அமேஸ்ஃபிட்டின் உரிமையாளருமான Zepp ஹெல்த் தனது முதல் பிரீமியம் ஸ்மார்ட்வாட்சான Zepp Z என்பதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் ரூ.25,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணியக்கூடிய ஸ்மார்ட்வாட்ச் AMOLED தொடுதிரை உடன், சுமார் 50 வாட்ச் ஃபேஸ், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவு மற்றும் 15 நாட்கள் வரை பேட்டரி லைஃப் ஆகியவற்றை வழங்குகிறது.

Zepp Z ஒரு வட்ட டயல், டைட்டானியம் அலாய் வாட்ச் கேஸ் மற்றும் லெதர் ஸ்ட்ராப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பக்கத்தில் மூன்று பொத்தான்களைக் கொண்டுள்ளது, இதில் ஹெல்த் கீ மற்றும் கிளாசிக் கிரௌன் ஆகியவை அடங்கும்.

ஸ்மார்ட்வாட்ச் 1.39 அங்குல (454×454 பிக்சல்கள்) AMOLED தொடுதிரை 550-நிட்ஸ் உச்ச பிரகாசம், 326ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 2.5D கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது 5ATM நீர் எதிர்ப்புத்திறனை வழங்குகிறது.

Zepp Z 340 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது வழக்கமான பயன்பாட்டுடன் 15 நாட்கள் வரை நீடிக்கும். இது 2.5 மணி நேரத்திற்குள் கடிகாரத்தை முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜருடன் தொகுக்கப்பட்டுள்ளது. இணைப்பிற்கு, இது புளூடூத் 5.0 மற்றும் GPS ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது.

ஸ்மார்ட் ஹோம் சாதனங்களின் ஹேண்ட்ஸ் ஃப்ரீ கட்டுப்பாடு, வானிலை சரிபார்ப்பு மற்றும் அழைப்பு விடுப்பதற்கான பிற செயல்பாடுகளுக்கு அலெக்ஸா மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஆஃப்லைன் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் ஆகியவற்றை Zepp Z ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது.

இது இதய துடிப்பு மற்றும் SpO2 கண்காணிப்பு, மன அழுத்தம் மற்றும் தூக்க கண்காணிப்பு மற்றும் 90 க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகளுக்கான ஆதரவையும் வழங்குகிறது.

இந்தியாவில், Zepp Z வாட்சின் விலை ரூ.25,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் ஜூலை 20 முதல் அமேசான் இந்தியா வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

Views: - 116

0

0