உலகின் முதல் அண்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

23 August 2020, 4:49 pm
ZTE Axon 20 5G, the world’s first phone with an under-display camera is coming soon
Quick Share

ZTE இன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது மொபைல் வட்டாரங்கள் பிரிவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆக்ஸன் 20 5ஜி என அழைக்கப்படும் புதிய ZTE தொலைபேசி உலகின் முதல் அண்டர் டிஸ்பிளே அதாவது டிஸ்பிளேவின் கீழ் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் (வணிக ரீதியாகக் கிடைக்கும்) எனக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ZTE ஆக்ஸன் 20 5ஜி பற்றிய புதிய மற்றும் கூடுதல் விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.

ஆக்ஸன் 20 5ஜி குறைந்தது மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அதிகாரப்பூர்வ டீஸர்கள் இளஞ்சிவப்பு, தங்கம் மற்றும் வெளிர் நீல வண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.

அதிகாரப்பூர்வ தகவல் கசிவுகள் மேல் இடது மூலையில் ஒரு செவ்வக கேமரா தொகுதி இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ZTE ஆக்ஸன் 20 5ஜி ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை பின்புற சென்சாருடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்ஸன் 20 5ஜி ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களின் கலவையுடன் வரும் என்று கூறப்படுகிறது. செல்ஃபிக்களுக்கு, இது 32 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டிருக்கும் (டிஸ்பிளேவின் கீழ்).

ஃபோன் முழு HD+ ரெசல்யூஷனுடன் 6.92 இன்ச் பெரிய டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. திரையில் AMOLED பேனல் இருக்கும். முன் எதிர்கொள்ளும் கேமரா தவிர, ZTE ஆக்ஸன் 5 ஜி திரையில் ஒரு கைரேகை சென்சார் பதிக்கப்பட்டிருக்கும்.

செயல்திறனுக்காக, ஆக்ஸன் 20 5ஜி 2.4GHz ஆக்டா கோர் செயலியில் இயங்கும், அதோடு 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு இருக்கும். செயலி குவால்காமின் ஸ்னாப்டிராகன் 765G சிப்பாக இருக்கலாம். 4,020 mAh பேட்டரியை இந்தத் தொலைபேசி கொண்டிருக்கக்கூடும். அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0