20 GB RAM உடன் ஒரு போனா! அசர வைக்கும் ஸ்மார்ட்போனை உருவாகும் பணியில் ZTE

5 July 2021, 2:42 pm
ZTE May Be Working on a 20GB RAM Phone, a Company Executive Teases
Quick Share

ZTE பிராண்ட் எதிர்காலத்தில் 20 GB RAM உடன் ஒரு தொலைபேசியைக் உருவாக்க திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனம் இதுவரை எந்தவொரு உறுதியான விவரங்களையும் வழங்கவில்லை என்றாலும், அந்நிறுவன நிர்வாகிகளில் ஒருவர் இது குறித்து ஆன்லைனில் தெரிவித்துள்ளார். ஆசஸ், லெனோவா உள்ளிட்ட நிறுவனங்கள் சமீப காலங்களில் 18 GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேளையில், 20 GB RAM உடன் தொலைபேசியை அறிமுகம் செய்வதன் மூலம், ZTE தெற்காசிய ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் டிஸ்பிளேவின் கீழ் செல்பி கேமரா உடன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இது இருக்கும்.

ZTE இன் இயக்குநர்களில் ஒருவரான லு கியான் ஹாவ், நிறுவனத்தின் 20 GB RAM தொலைபேசியின் அறிமுகம் குறித்து வெய்போவில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு 1TB ஸ்டோரேஜ் உடன் தொலைபேசிகள் வெளியாகும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இப்போதைக்கு இந்த 20 GB RAM  கொண்ட தொலைபேசி ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் அனைத்து பயனர்களுக்கு வெளியாக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆசஸ் தனது ROG போன் 5 அல்டிமேட் (லிமிடெட் பதிப்பு) மாடலை கடந்த மார்ச் மாதத்தில் 18 GB RAM உடன் அறிமுகம் செய்தது. லெனோவா நிறுவனமும் தைவானிய ஆசஸ் நிறுவனத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி லெனோவா லெஜியன் போன் டூயல் 2 மாடலை 18 GB RAM உடன் அறிமுகப்படுத்தியது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், ZTE பிராண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC உடன் அதன் இரண்டு ஸ்மார்ட்போன்களாக ZTE ஆக்சன் 30 அல்ட்ரா 5 ஜி மற்றும் ஆக்சன் 30 புரோ 5ஜி ஆகியவற்றைக் கொண்டு வந்தது. இருப்பினும், அந்த சாதனங்களில் 16 GB RAM இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 139

0

0