உங்க ஊருல கொரோனா நிலவரம் தெரியுமா..? இதோ மாவட்ட வாரியான பாதிப்பு விபரம்!!

31 July 2020, 6:49 pm
Cbe Corona Gents - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் முன்பை விட இன்றும் பாதிப்பு சற்று கொஞ்சம் குறைந்த நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுமாராக இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. ஆனால், இன்று சற்று குறைந்து 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 1,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 99,794 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் 485 பேருக்கும், திருவள்ளூரில் 373 பேருக்கும், ராணிப்பேட்டையில் 359 பேருக்கும்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம்

Leave a Reply