வார்னரின் பர்த்டே கிஃப்-ஆக இமாலய வெற்றியை வழங்கியது ஐதராபாத் : மோசமான தோல்வியால் புள்ளிப்பட்டியலில் டெல்லிக்கு பின்னடைவு!!

27 October 2020, 11:08 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோற்கடித்தது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க விரர்கள் வார்னர், சஹா அதிரடி காட்டினர். இதனால், பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து, அரைசதம் விளாசிய வார்னர், 66 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடி காட்டிய சஹா 45 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். பின்னர், வந்த மணீஷ் பாண்டேவும் (44) தனது பங்கிற்கு ரன்களை சேர்க்க, 20 ஓவர்களில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது.

கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ரிஷப் பண்ட் (36), ரஹானே (26) ஆகியோர் மட்டும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதிப் டெல்லி அணி 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்த அணி தரப்பில், ரஷித்கான் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு பின் தங்கியது.