இன்றும் மதுரைக்கே 2-வது இடம் : மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம்..!

30 June 2020, 6:49 pm
corona_updatenews360 (2)
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று மட்டும் 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நோய் தொற்று அதிகம் காணப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுமாராக இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக 3,943பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 2,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, மதுரையில் 246 பேருக்கும், செங்கல்பட்டில் 160 பேருக்கும், திருவள்ளூரில் 153 பேருக்கும், பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 5,419 பேரும், திருவள்ளூரில் 3,830 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அரியலூர், புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம் :

Leave a Reply