23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்… விஸ்வரூபம் எடுத்த மதுரை மருத்துவக் கல்லூரி சம்பவம் : சிக்கிய துணைப் பேராசிரியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2023, 10:01 pm
Sex Abuse - Updatenews360
Quick Share

மதுரை மருத்துவக் கல்லூரி மயக்கயவியல் துறையின் துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசைன் மருத்துவக் கல்லூரி மயக்கவிகள் துறையில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் பெற்றப்பட்டது.

இதனை அடுத்து விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு கமிட்டியில் 23 மாணவிகள் எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் துணை பேராசிரியர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது.

இதனை அடுத்து அவரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் உத்தரவு வழங்கியது.

இதனிடையே துணைப் பேராசிரியர் செய்யது தாகிர் உசைன் செய்தியாளர்களை அழைத்து பேசுகையில், “மருத்துவத்துறையில் நடைபெறும் முறைகேடுகளையும், கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகவும் புகார் அளித்ததால், என்னைப் பழிவாங்க, முறையான விசாரணை நடத்தாமல் இப்படி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்

இது தொடர்பாக இன்று செய்தியாளரை சந்தித்த மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேலு பேசும் பொழுது கடந்த 6ம் தேதி மயக்கவியல் துறையில் பயிலும் மாணவிகளிடமிருந்து துணை பேராசிரியர் செய்யது தாஹீர் உசைன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 8ம் தேதி எழுத்துப்பூர்வமான புகார் பெறப்பட்டு மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேலு மேற்பார்வையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் தனலட்சுமி தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதில் 18 மாணவிகள் ஒரு செவிலியர் 2 பேராசிரியர்களிடம் எழுத்து வழியாக புகார் பெறப்பட்டது. இதனை அடுத்து மாணவிகளிடம் துணை பேராசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதன் அறிக்கை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் ரீதியான புகார் பெறப்படுவது இதுதான் முதல் முறை என்றும் தெரிவித்தார்.

இது போன்ற புகார்கள் மீது உடனடியாக மருத்துவக் கல்லூரி நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.

Views: - 300

0

0