எல்லா ஸ்கூலுக்கும் விட்டாச்சு லீவு..! ஆனா காரணம் தான் கொஞ்சம் கவலையா இருக்கு…!

13 February 2020, 11:20 pm
corono virus3- updatenews360
Quick Share

பெய்ஜிங்: நாட்கள் நகர்ந்தாலும் இந்த பயமும், பீதியும் சரியாகவே இல்லை. நிலைமை மோசமானதால் சீனாவில் எல்லா ஸ்கூலுக்கும் லீவு விட்டாச்சு… எல்லாம் கொரோனா மயம்தான்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. ஒரே நாளில் மட்டும் 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பால் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள சர்வதேச கால்பந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டது.

அது மட்டுமின்றி நோக்கியா, வோடோபோன் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் கொரோனாவைரஸ் அச்சத்தின் காரணமாக வர மறுத்து விட்டன. அதனால் உலக மொபைல் மாநாடும் ரத்து செய்யப்பட்டது

ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளையும் ரத்தாகும் என்று தகவல்கள் கிளம்பி உள்ளன. இந் நிலையில் சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.