எதிர்கட்சியாக வரும் எண்ணமில்லை… ஆனால், நம்பர் 1 கட்சியாக மாற்றுவதே இலக்கு : அண்ணாமலை அதிரடி பேச்சு…!!

Author: Babu Lakshmanan
9 June 2022, 5:11 pm
Quick Share

சேலம் : தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்கட்சியாக உருவாக்குவதே திமுகதான் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஆளும் திமுகவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதான். பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்து தற்போது நியூட்ரிசியன் கிட் வரையில் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இதனால், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வரும் அமைச்சர்கள், பாஜகவை எதிர்கட்சியாகக் காட்டிக் கொள்வதற்காகவே, அவர் இது போன்று பேசி வருவதாக கூறினர். இது அதிமுகவுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஆளும்கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்துமே எதிர்கட்சிதான் என்று கூறிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதான எதிர்கட்சி அதிமுக என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திமுக அரசுதான் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார் .

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- தமிழ்நாட்டில் திமுக அரசுதான் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது. பாஜக கட்சியின் எண்ணம் எதிர் கட்சியாக வருவதல்ல. ஆளும்கட்சியாக வருவது தான் . நம்பர் 3 பார்ட்டியாக வருவதற்க்கு கட்சி நடத்தவில்லை, நம்பர் 1 பார்ட்டியாக வருவதற்கு கட்சி நடத்துகிறோம் .இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 878

0

0