ரூ.12 லட்சம் கோடி ஊழல்… வேட்டி முதல் குண்டூசி வரை அனைத்திலும் முறைகேடு… திமுக கூட்டணி மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
4 April 2024, 2:34 pm
Quick Share

பாஜக பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளதாகவும், மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: கூட்டணிக்காக அச்சுறுத்திய பாஜக.. ஜெயலலிதா போல துணிந்து எடுத்த முடிவு ; பிரேமலதா விஜயகாந்த் பரபர பேச்சு..!!!

அப்போது பேசிய அவர், திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வரவேண்டும். தமிழகத்தின் அரசியல் களத்தை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் 2024ம்ஆண்டு பாரளுமன்றத்தில் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்ய வேண்டும் என்ற தேர்தல்.
பாஜக பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளார்கள்.

2014ம் ஆண்டு 283, 2019ம்ஆண்டு303 எம்பிகள் வந்த நிலையில், இந்த முறை 400 எம்பிக்கள் தாண்டி வரவேண்டும் என்று பாஜக உழைக்கிறது. பவானி ஜம்முக்காளம் அடையாளத்தை காக்கவே, இதனுடன் ஆறு தொகுதி மக்களின் அடையாளமாக பாஜக வேட்பாளர் முருகானந்தம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க: தெரு தெருவாக செருப்பு மாலை அணிந்து வாக்கு சேகரித்த வேட்பாளர் : பரபரப்பை கிளப்பிய பிரச்சாரம்!

கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரச்சாரம் செய்து வருகிறார். 100 வாக்குறுதியை வேட்பாளர் கையேடு உருவாக்கி உள்ளார். அதனை பட்டி தொட்டி எல்லாம் செல்ல வேட்பாளர் முருகானந்தம் இருப்பார்.

உலகத்தில் யாருக்கு புரோஜனம் இல்லாமல் அரசியலில் இருப்பது கம்யூனிஸ்ட் கட்சி காரர்கள் தான். யாரும் தற்போதைய எம்பியை பார்த்து இருக்க மாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வரும் போது, கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றால் மோடி இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்வார்கள். இதனால், பிரதமர் நரேந்திர மோடியாகும் போது, பாஜக சார்ந்த எம்பி அமைய, வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.

தேர்தலுக்கு 13 நாட்கள் தான் உள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் பாஜக வேட்பாளருக்கு உழைக்க வேண்டும். வீடு தோறும் சென்று, மோடி மூன்றாவது முறையாக வருவார் என்று சொல்ல வேண்டும். வாக்காளர்கள் எது கேட்டாலும் 10 தவல்களை சொல்ல வேண்டும். அதில் இந்திய பொருளாதார உயர்வு, 2014ம் ஆண்டில் உலகத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வந்தது. இந்தியா கூட்டணி பொருளாதார வளர்ச்சி கொடுக்க முடியுமா என்று சிந்தித்து பார்க்க சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க: தேர்தலுக்குப் பிறகு மோடி சும்மா தான் இருப்பார்… நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பி வைப்பார் முதலமைச்சர்; கனிமொழி கிண்டல்!!

அதனை தொடர்ந்து, சமூக நீதி குறித்து சொல்ல வேண்டும் 76 அமைச்சர்களில் 11 பேர் பெண்கள், 12 பட்டியிலினவர்கள், 27 பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியோர் அமைச்சராக உள்ளனர். ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியில் 35 பேரில் இரண்டு பெண்கள், 2 பேர் பட்டியலின பெண்கள் அவர்கள் குடும்ப கோட்டா அடிப்படையில் வந்து இருப்பார்கள். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மட்டுமே சமூக நீதி பின்பற்றப்படுகிறது.

நான்கு ஜாதிகள் தான் மோடி நம்புகிறார். ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கு ஜாதிகள் தான் மோடி நம்புகிறார். 45 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 89490 பேர் விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் 30 ஆயிரம் வங்கி கணக்கு வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஆனால் மோடி சொல்லாமல் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைத்து வருகிறார்.

பவானியில் அரசு கல்லூரி ஏன் இல்லை ஏனென்றால், சட்டமன்றத் உறுப்பினர் கல்லூரி நடத்துவதால் அரசு கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. பொருளாதாரம் சமூக நீதி அனைத்து மக்களின் வளர்ச்சி பெற மோடிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் மற்றும் வரும் 25 ஆண்டுகளுக்கு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல்.

2019ம் ஆண்டு தேர்தலில் 295 தேர்தல் அறிக்கை பாஜக கொடுத்தது. இதில் 295அறிக்கை ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டது. பாஜக தேர்தல் வாக்குறுதியோடு, திமுக கம்யூனிஸ்ட் அதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதனால், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து பேச நேருக்கு நேர் தயார்.

திமுக பொறுத்தவரை கோபாலபுரம் வளர்ந்தால் போதும் என்று வளர்ச்சி நினைக்கிறார்கள். அதனால் வளர்ச்சி தேவை, வீக்கம் தேவை இல்லை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது துபாய், ஸ்பெயின் போன்ற வெளி நாடு முதல்வர் சென்ற நிலையில் முதலீடு வரவில்லை.

யோசனை செய்து தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு. இதனால் தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். எல்லா பக்கமும் மின் கட்டணம் உயர்வு ஏற்றப்பட்டுள்ளது. விடியல் என்று தருகிறேன் என்று சுடுகாட்டிற்கு பாதை அமைத்து நம்மை அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் மோடி வந்தால் இதே பஞ்ச பாட்டை தான் திமுக கூட்டணி பாடுவார்கள். இதனால் மோடியை வலிமை படுத்த பாஜக கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

வலிமையான நாடு மோடி அரசு உருவாக்கி உள்ளது. தீவிரவாதம் இல்லை, குண்டு வெடிப்பு, கலவரம், வெளிநாட்டு கூலிப்படை இல்லாத வகையில், மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் பெண்கள் இரவு சுதந்திரமாக நடவடிக்கை இல்லை. ஹெல்மெட் போட்டு கொண்டு செல்கிறார். இதன் மூலம் கூலிப்படை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சட்டசபையில் சட்ட ஒழுங்கு சிரிக்கிறது.

76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை. ஆனால், தமிழகத்தில் வேட்டி வாங்குவதில் முறைகேடு, குண்டூசி கூட விடாமல் தமிழகத்தில் ஊழல் உள்ளது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் 29 பைசா என்று சொல்கிறார்கள். ஆனால், நாம் உதயநிதி, கஞ்சா உதயநிதி என்று சொல்லலாமா..? கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க சென்றால், அறிவாலயம் வாசலில் வரிசையாக நிற்கிறார்கள். கஞ்சா விற்பனை கிராம தோறும் அதிகரித்து உள்ளது.

முதல்வர் நிதிநிலை அறிக்கைக்கு கொடுத்தால் தான் கணக்கில் கொள்வோம். ஆனால், மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் பணம் கணக்கு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். கோபாலபுரம் அனுப்பினால் தான் கணக்கு என்று சொல்கிறார்கள். அரசியலை மோடி மக்கள் பக்கத்தில் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தின் கலாச்சாரம்,பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு, இதுவரை எந்த பிரதமரும் கொடுக்காத அங்கீகாரத்தை மோடி கொடுத்துள்ளார்

மோடி சாமானிய மகனாக இருந்து உழைப்பு மூலம் வளர்ந்து வருகிறார் மேலும் சாமானிய மக்களை கண்டறிந்து கெளரவிப்பதற்காக பத்மா விருது வழங்கப்படுகிறது. மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் சாமானிய மக்கள் பற்றி மோடி பேசி வருகிறார். சாமானிய மக்களுக்கு மரியாதை செலுத்தும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள். பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல்காந்தி, லல்லு பிரசாத் மகன் ஆகியோர் நான் தான் பிரதமர் என்று சொல்லி வருகிறார்கள். நாட்டை ஆட்டை அறுப்பது போல நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நடைபெற்றது. இதனால் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குகளும் பாரத பிரதமர் மோடியை வலுப்படுத்த வேண்டும்.

உங்கள் குழந்தை அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இந்த கூட்டணி 2026 ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணியாக பயணம் செய்ய இருக்கிறோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 111

0

0