இனி சென்னை சென்ட்ரல் அமைதியான ரயில் நிலையம் இல்லை.. ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2023, 6:16 pm
Central - Updatenews360
Quick Share

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக ரயில்கள் வரும் நேரம், சேரும் இடம், நடைமேடை உள்ளிட்டவை ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒலிப்பெருக்கி அறிவிப்பு நிறுத்தப்பட்டு ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடுகளை டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பும் நடைமுறை தொடங்கி உள்ளது.

விமான நிலையங்கள் போல நிமிடத்திற்கு நிமிடம் ரயில்கள் குறித்த விபரங்கள் திரையில் ஒளிபரப்பாகும். அதைப் பார்த்து பயணிகள் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலதிக தகவல்களை பெற விசாரணை மையங்களும் உள்ளன. சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம் பயணிகளின் வரவேற்பை பொறுத்து நிரந்தரமாக்கப்படும்.

இந்த நிலையில் அமைதி ரயில்நிலையம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது தெற்கு ரயில்வே. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அமைதி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டிருந்தது இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.

ஒலிபெருக்கியின் வழியாக செய்யப்படும் அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் ஒலி மாசுக்கு வித்திட்டு, வந்துசெல்லும் பயணிகளின் புகார்களுக்கு காரணமாக இருந்ததால் சோதனை அடிப்படையில் கடந்த வாரம் இந்த ரயில் நிலையம் அமைதி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஒலிபெருக்கி வழியே செய்யப்படும் அனைத்து அறிவிப்புகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு, ‘அமைதி ரயில் நிலையம்’ என்ற அறிக்கை திரும்பப்பெறப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுளள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 334

0

0