அதிமுகவில் இணைந்தார் மருத்துவர் சரவணன் ; சைலண்டாக இருந்து அதிரடியை காட்டிய இபிஎஸ்.. குஷியில் நிர்வாகிகள்!!

Author: Babu Lakshmanan
4 January 2023, 1:14 pm
Quick Share

பாஜகவில் இருந்து விலகிய மருத்துவர் சரவணன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையின் மூலம் பிரபலமானவர் மருத்துவர் சரவணன். மதிமுகவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், பல கோடி ரூபாய் செலவு செய்து, அகிலன் என்ற படத்தில் நடிகராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அங்கிருந்து பாஜக, திமுக என கட்சி மாறிய அவர், 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து மீண்டும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்க்கு இடம் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அவர், மீண்டும் பாஜகவில் சேர்ந்தார். இதனையடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் உடனடியாக டாக்டர் சரவணனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

பாஜகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய சரவணன், மீண்டும் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. டாக்டர் சரவணனும் அதற்காக காத்திருந்தார். ஆனால், அவரை மீண்டும் கட்சியில் இணைக்க திமுக தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், காத்திருப்பு ஏமாற்றம் அடைந்தது. இதனையறிந்த அதிமுகவினரும் அவரை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் உள்ளூர் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

Views: - 367

0

0