ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை அறிவித்த இபிஎஸ் : பாஜக ஆதரவு யாருக்கு?!!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2023, 9:47 am
Admk EPS - Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தற்போது ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக பதவி வகித்து வரும் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

65 வயதான தென்னரசு இதற்கு முன்பு அதே தொகுதியில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இந்த கூட்டத்தில் பேசிய எஸ்பி வேலுமணி, கடுமையான போட்டி நிலவியதால் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தார்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியில் யாருக்கு ஆதரவு தருவது, பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நேற்று அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த, பாஜக துணைத் தலைவர் நாரயாணன் திருப்பதி, ஓரிரு நாளில் பாஜக முடிவு வெளியிடப்படும் என்றும், அதிமுக காத்திருப்பதில் தவறில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 309

0

0