தி.மு.க. தற்போது உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ளது : போட்டுடைத்த கு.க. செல்வம்..!

14 August 2020, 11:52 am
kk selvam 12- updatenews360
Quick Share

சென்னை : தி.மு.க. தற்போது உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., கு.க., செல்வம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர் பதவி கொடுக்காததால் ஆயிரம் விளக்கு தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., கு.க. செல்வத்திற்கும், கட்சியின் தலைமைக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். இதனால், அதிருப்தியடைந்த தி.மு.க. அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயகப் படுகொலை. இருப்பினும், கட்சியில் இருந்து நீக்கியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் எந்த கட்சியிலும் இதுவரை சேரவில்லை. சட்டப்பேரவையில் யாருக்கு ஆதரவாக செயல்படுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

வேறு கட்சியின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தால் நிச்சயம் போட்டியிடுவேன். தி.மு.க. தற்போது உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வரிசையாக வெளியேறுவார்கள், எனத் தெரிவித்தார்.

Views: - 0

0

0