ரூ.50 லட்சம் தேவையில்ல… நான் உண்மையான விஸ்வாசி… திமுகவின் பேரத்திற்கு விலைபோகாத அதிமுக பெண் கவுன்சிலர்…வைரலாகும் ஆடியோ!!

Author: Babu Lakshmanan
5 March 2022, 11:25 am
Quick Share

நெல்லை : திசையன்விளை பேரூராட்சி தலைவர் பதவியை குலுக்கல் முறையில் அதிமுக கைப்பற்றிய நிலையில், ரூ.50 லட்சம் ரொக்கத்திற்கும், துணைத் தலைவர் பதவிக்கும் மயங்காத அதிமுக பெண் கவுன்சிலரின் நேர்மை பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 இடங்களில் அதிமுக 9 இடங்களையும், திமுக, காங்கிரஸ் தலா 2 இடங்களையும், பாஜக, தேமுதிக தலா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா நேரு உள்பட 3 சுயேட்சைகளும் திமுகவில் இணைந்து கொண்டனர்.

இதனிடையே, திசையன்விளை பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு திமுக தலைமை சுபீனா என்பவரை அறிவித்தது. ஆனால், அவரை முன்மொழிய ஒருவரும் இல்லாததால், அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து, திமுகவில் இணைந்த சுயேட்சையான கமலா நேருவை அதிமுகவுக்கு எதிராக களமிறக்க உள்ளூர் திமுக நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் தலா 9 வாக்குகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இதனிடையே, பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற பாஜக, தேமுதிக மற்றும் சுயேட்சைகளை வளைத்து போட்ட திமுகவினரால், 9வது வார்டு அதிமுக நிர்வாகியான உமா என்பவரை விலைபேசி வழிக்கு கொண்டு வர முடியவில்லை. திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் ரூ.50 லட்சம் ரொக்கமும், துணை தலைவர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தைக் கூறினார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பணத்திற்கு ஆசைப்படாமல் கட்சி மீதான பற்றும், விஸ்வாசமும் உள்ள இதுபோன்ற அரசியல்வாதிகள்தான் தமிழகத்திற்கு தேவை என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 836

1

0