இது நியாயமா..? விவசாயிகளுக்கு அப்போ ரூ.30 ஆயிரம்… இப்ப ரூ.13 ஆயிரம் தானா..? திமுக அரசை விளாசிய எஸ்பி வேலுமணி!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 4:46 pm
Quick Share

தமிழக மக்கள் படும் இன்னல்கள் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோக்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தமிழக அரசு மிரட்டுவதாக எதிர்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அதன்பிறகு, சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்தது. பின்னர், சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி கொறடாவும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

EPS - Updatenews360

அவர் பேசியதாவது:- அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி காலதாமதம், திருவாரூர் குடவாசல் கலைக்கல்லூரி இடமாற்றம் பிரச்சனை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என்பது குறித்தும்,கொரோனா காலத்தில் பணி செய்த செவிலியர்களை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 2 மணிநேரம் உரையாற்றினார்.

ஆனால் இதனை எந்த ஊடகங்களும் ஒளிபரப்ப வில்லை. தமிழகத்தில் உள்ள ஊடகங்களை ஆளுங்கட்சி மிரட்டி வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்து விட்டு, தற்போது ஆளுங்கட்சியாக ஆன பின் 13 ஆயிரம் ரூபாய் ஏக்கருக்கு கொடுக்கிறார்கள். அதை 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவு கடன் வாங்கியதாக குற்றம் சாட்டிய திமுக, தற்போதைய ஆட்சியில் இருக்கும் திமுக அரசு 20 மாதங்களில் வரைமுறை இல்லாமல் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது, என தெரிவித்தார்.

Views: - 322

0

0