தேர்த்திருவிழாவில் 11 பேர் பலியானது எப்படி..? ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்ட தகவல்..!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 9:07 am
Quick Share

தஞ்சையில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் நேற்று இரவு அப்பர் குருபூஜை விழாவின் போது தேரின் மீது மின்சார உயிரிழந்த கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். மேலும், சிகிச்சை பெற்று 13 பேரில், ஒரு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மற்றும் ஐஜி பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா ஆகியோர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விபத்து குறித்து கள்ளபெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை குறித்து முழு தகவல் வந்த பிறகே காரணம் தெரிய வரும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விபத்தின்போது காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Views: - 676

0

0