5ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு

2 February 2021, 2:18 pm
EPS in assembly 1 - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் தொடங்கியது. பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த ஆரம்பித்ததும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர், 7 பேரின் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பி ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுகவினர் அவையை வெளிநடப்பு செய்தனர். பின்னர், ஆளுநரின் உரைக்கு பிறகு, அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை வரும் வெள்ளிக்கிழமை வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 29

0

0