கோவை பசுமை சாம்பியன் விருதை பெற்றது பிஎஸ்ஜி கல்லூரி!!

Author: Rajesh
12 May 2022, 5:57 pm
Quick Share

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாவட்ட பசுமை சாம்பியன் விருதை வென்றுள்ளது.

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 2021-22ம் ஆண்டிற்கான இந்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்விக் குழுவினால், ஸ்வச்தா செயல் திட்டத்தை செயல்படுத்தி, நிலையான மற்றும் பசுமையான நடைமுறைகளை பயனுள்ள வகையில் மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க முன் முயற்சிகளை மேற்கொண்டதற்காக மாவட்ட பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டது.
ஆற்றல் மற்றும் நீர் மேலாண்மை, பல்லுயிர், திறமையான கழிவு உற்பத்தி மற்றும் வளாகத்தில் அகற்றும் நடைமுறைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி கவுன்சில் தலைவர் டாக்டர் டபிள்யூ ஜி பிரசன்ன குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை வழங்கினர்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியன் செயலாளர் கண்ணையன் மற்றும் முதல்வர் பிருந்தா ஆகியோர் விருதினை பெற்றனர்.இதில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Views: - 666

0

0