குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை : உலா வரும் பகீர் சிசிடிவி காட்சி.. அச்சத்தில் மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2022, 11:07 am
Leopard - Updatenews360
Quick Share

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் அவ்வப்போது விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் மற்றும் ஊருக்குள் புகுந்து ஆடு மாடுகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாக இருந்த நிலையில் தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் உலாவத் தொடங்கி விட்டது.

இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, நேற்றிரவு ஆசனூர் அடுத்த பங்களா தொட்டி கிராமத்தில் வசிக்கும் ஆரோக்கியசாமி வீட்டின் முன்பு நடமாடி உள்ளது.

இந்த காட்சி அவர் கடையின் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Views: - 683

0

0