ஸ்பெயினில் நடக்கும் அர்னால்ட் கிளாசிக் இரும்பு மனிதன் .. ஆயத்தமாகும் தமிழக இரும்பு மனிதன் கண்ணன்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 April 2023, 4:53 pm
Quick Share

கன்னியாகுமரி ; ஸ்பெயினில் அர்னால்ட் கிளாசிக் இரும்பு மனிதன் போட்டிக்காக இந்தியாவின் கண்ணன் மீண்டும் ராட்சத டயர்களை தூக்கி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரைக்குட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(40). இவர் பஞ்சாபில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான கண்ணன் இவரது கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் கயிற்றில் லாரியை கட்டி இழுப்பது, கார் பைக் போன்றவற்றை தூக்கி கொண்டு நடப்பது குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இளைஞர்கள் மத்தியில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வெளிகாட்டி வருகிறது.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டிக்கு இவர் தற்போது தேர்வு பெற்றுள்ளார். இப்போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 13,14,15 தேதிகளில் ஸ்பெயின் நாட்டில் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பாக கண்ணன் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், இதற்கான பயற்சியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக இரண்டு இராட்சத டயரை கொண்டு உடற்பயிற்சி நிலையத்தில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

Views: - 172

0

0