கருமத்தம்பட்டி நகராட்சி 3வது வார்டை பொது வார்டாக அறிவிக்க வலியுறுத்தல்: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்…கோவையில் பரபரப்பு..!!

Author: Rajesh
21 ஜனவரி 2022, 5:13 மணி
Quick Share

கோவை: கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் மூன்றாவது வார்டை பொது வார்டாக அறிவிக்க வலியுறுத்தி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு ஆட்சி அமைத்ததும் பேரூராட்சிகள் எல்லாம் நகராட்சிகள் ஆக அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து கருமத்தம்பட்டி பேரூராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் நகராட்சியாக மாற்றப்பட்டது. இதில் 18 வார்டுகளாக இருந்த நிலையில் இப்பொழுது 27 வார்டு ஆக பிரிக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னி ஆண்டவர் கோவில் 3வது வார்டு எஸ்.சி. வார்ட் ஆக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் 150க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை நாலு மணிக்கு முற்றுகை போராட்டம் ஆரம்பித்து இரவு 12 மணி வரை அதே இடத்தில் அமர்ந்தனர்.

இதையடுத்து ஆணையாளர் இரவு 11 மணி அளவில் நேரில் வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். காலையில் அலுவலகம் வந்தபின் உங்களுக்கு அதிகாரப்பூர்வமான ஆதாரம் காண்பிக்கிறேன் என்றவுடன் 12 மணி அளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து. சமூக ஆர்வலர் அருள் கூறியதாவது, கருமத்தம்பட்டி 3-வார்டு முன் அறிவிப்பின்றி எஸ் சி. வார்ட் ஆக அறிவிக்கப்பட்டு அரசு ஆணை வெளியிட்டது. இதற்கு இப்பகுதி மக்கள் ஆகிய நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்கள் பகுதியில் மட்டும் மொத்தம் 842 ஓட்டுகள் உள்ளன. இதில் 110 எஸ் சி ஓட்டாக உள்ளன.

இதில் மெஜாரிட்டியாக 700க்கும் மேற்பட்ட எங்கள் பகுதி மக்கள் ஓட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களிடம் எந்த ஒரு ஆலோசனையும் இன்றி எஸ் சி. பெண் வார்டாக அரசு அறிவித்தது. இதை நாங்கள் பொதுவாக வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், எலக்சன் கமிஷனையடுத்து இப்பொழுது நகராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளோம்.

மனு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஊர்மக்கள் ஒன்றுகூடி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 7878

    0

    0