நடுக்காட்டில் தொங்கிய எலும்புக்கூடு… 9 மாதங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவி ; அரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 5:01 pm
Quick Share

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல், வெறும் எலும்புக்கூடுகளாக நடுக்காட்டுப்பகுதியில் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட எஸ்.அம்மாபாளையம் அடுத்த முள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருடைய மகள் ஞானசௌந்தர்யா, கோயமுத்தூரில் கடந்த 9 மாதத்திற்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது, இவருடைய பொது தேர்வை முடித்துவிட்டு, தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றுள்ளார்.

திருவிழா நடைபெறும் பொழுதே இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர். பின்பு காவல்துறையினர் மற்றும் இவருடைய பெற்றோர் உறவினர்கள் என அனைவரும் கோயமுத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எங்கு தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் சேகரிக்க முடியவில்லை.

தன்னுடைய மகள் உயிரோடுதான் யாருடைய பாதுகாப்பிலோ உள்ளார் என எண்ணியிருந்த இவருடைய தந்தை பெருமாளுக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர், எஸ்.அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் உடல்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒருசில எலும்புக்கூடுகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தனது மகளாக இருக்குமோ என எண்ணி, இவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, தனது மகள் தான் என்று உறுதி செய்தனர். இது குறித்து கோட்டப்பட்டி காவல்துறையினுக்கு தகவல் அளித்ததன் பெயரில் சோதனை செய்து மருத்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு, அங்கு இருந்த பெண்ணின் எலும்பு கூடுகளை மற்றும் அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவர்களை சேகரித்து டிஎன்ஏ டெஸ்ட் மற்றும் உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.

மேலும், இந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இது தற்கொலை அல்ல இந்த கொலையில் யார் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுப் பகுதியில் வெறும் எலும்பு கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Views: - 368

0

0