பெண்களின் முகத்தில் கண்களுக்கு கீழே உள்ள சதைகளை போக்குவது எப்படி? சிம்பிள் 5 வழிமுறைகள் உங்களுக்காக!

15 February 2020, 9:50 am
under-eyes updatenews360
Quick Share

பெண்களின்   முகத்தில் உள்ள   சதைகள் அவர்களின்   முக அழகையே கெடுத்து  விடுகின்றன. பருக்கள், கோடுகள்   மற்றும் சுருங்கிய தோல்கள் போன்றவை   நம் முகத்தையே மாற்றிக் காட்டுகின்றன. கண்களுக்கு   அருகில் உள்ள சதைகள் அதிகமாக இருந்தால், நம் முகமே   குண்டாக இருப்பது போல் இருக்கும். அந்த சதைகள் போக   கீழே உள்ள வழிகளை நீங்கள் பின்தொடரலாம்.

முகம் இப்படி இருந்தால்   பெண்கள் அதிகமாக வருத்தப்படுவதுண்டு.  முகத்தில் உள்ள சதைகள் போக ஏராளமான வழிகள்  உள்ளது .

தூக்கமின்மை :

உங்களுடைய   உடலுக்கு போதுமான  அளவு தூக்கம் கிடைக்கவில்லை  என்றால் உங்கள் முகம் சோகமாக   இருக்கும். தூக்கமின்மை காரணமாக கண்களை   சுற்றி கோடுகள் மற்றும் வீக்கங்கள் ஏற்பட  வாய்ப்புள்ளது. அதற்கு சரியான அளவு தூங்குவதே   உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். இதனால் உங்கள்   கண்களும் ஓய்வடையும். முகம் பொலிவுடன், பிரஷ் -ஆக இருக்க   செய்யும்.

உப்புஅதிகமாக  சேர்ப்பது:

உப்பு அதிகமாக  இருக்கும் உணவுகளை  உட்கொள்வதை தவிர்க்க  வேண்டும். காரணம் அளவுக்கு  அதிகமாக உணவில் உப்பு சேர்க்கும் போது  நம்கண்களுக்கு கீழே வீக்கம் போன்று ஏற்பட வாய்ப்புள்ளது.

மேக்கப்  கலைத்து விடுங்கள்:

மேக்கப்பை  நீங்கள் அதிகமாக  விரும்பினால் போட்டுக்கொள்ளலாம்.  ஆனால் இரவுவேளைகளில் தூங்கும்போது  முகத்தை கழுவிவிடவேண்டும். மேக்கப்புடன்  தூங்குவது நல்லதல்ல, அவை உங்கள் முகத்திற்கு  தீங்குவிளைவிக்க கூடியது. தினமும் மேக்கப்புடன்  தூங்குகிறீர்களா என்பதை கவனித்துகொள்ளுங்கள்.

கெட்ட  பழக்கங்களை  தவிர்த்தல் நல்லது:

மதுஅருந்துவது  மற்றும் புகைப்பழக்கம்    போன்ற கெட்ட செயல்களில் நீங்கள்   ஈடுபடுவீர்கள் என்றால் அதை உடனே விட்டுவிடுங்கள். இவை   உங்கள் உடல் அழகை கெடுப்பதுடன், முகத்தையும் கெடுக்க செய்கின்றது.

கண்களை  பராமரிப்பது :

  • உங்களுடைய  கண்களை கவனிப்பதில்   அதிக கவனம் செலுத்த வேண்டும். டிவி, செல்போன்  மற்றும் கணினி ஆகியவற்றை அதிக நேரம் பார்ப்பதை   தவிர்க்கவும்.
  • அதுமட்டுமில்லாமல்   உங்கள் கண்களை அடிக்கடி   குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.  அதை தவிர கண்களில் வெள்ளரி மற்றும்  உருளைக்கிழங்கு போன்றவற்றை கண்களுக்கு வைத்து  மசாஜ் செய்யலாம்.

இந்த  முறைகளை   நீங்கள் பாலோ   செய்தால் போதும்,  உங்கள் கண்களுக்கு கீழே   வீக்கங்கள் மற்றும் சுருக்கங்கள்   வராமல் இருக்க செய்யும்.