நரை முடியில் இருந்து விடுபட இதை மட்டும் செய்தால் போதும்!!!!

25 March 2020, 5:00 pm
hair tips updatenews360
Quick Share

நரைமுடி நீங்கள் வயதாகி கொண்டிருப்பதை உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். இருப்பினும் இள வயதில் தோன்றும் நரை கண்டிப்பாக உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கும். நரைமுடி உங்களது தோற்றத்தை பாதிப்பதோடு உங்களின் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை அது குறைத்து விடுகிறது. இளபரை என்பது இருபது வயதிற்கு உள்ளாக முடி நரைத்து போவது. இது இருபத்தி ஐந்து வயதிற்கு உள்ளாக ஆசியர்களுக்கும், முப்பது வயதிற்கு உள்ளாக ஆப்ரிக்கற்களுக்கும் தோன்றுகிறது.

இளநரை என்பது வைட்டமின் B12, இரும்புச்சத்து, க்ரானிக் புரதம், காப்பர் முதலியவற்றின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. எனவே சரியான உணவை உண்டு வரும் போது இளநரையில் இருந்து தப்பித்து கொள்ளலாம். உங்களது உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் தயிர் உள்ளிட்டவையை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அது உங்களுக்கு  மென்மையான தலைமுடியை தருவதோடு நீண்ட முடியையும் தரும். தலைமுடியை கருமையாக்க உதவும் பொருள் உங்கள் சமையல் அறையில் தான் உள்ளது. கடைகளில் ஏராளமான பொருட்கள் நரை முடியை தடுக்க விற்கப்படுகின்றன. அவைகளில் கெமிக்கல்கள் உள்ளதால் தலைமுடியை பாழாக்கி விடுகின்றது. எனவே அவற்றை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு நரையை தடுப்பது என்பதை காண்போம்.

◆எலுமிச்சை சாறு மற்றும் பாதாம் எண்ணெய்:

நரை முடியில் இருந்து விடுபட எலுமிச்சை சாறு மற்றும் பாதாம் எண்ணெயை இரண்டிற்கு மூன்று என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை தலைமுடி வேர்கள் மற்றும் முடியில் தடவுங்கள். பிறகு முப்பது நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு குறைந்த வீரியம் கொண்ட ஷாம்பூவால் அலசி விடலாம். பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் E முடிக்கு தேவையான போஷாக்கை தருகிறது. மேலும் எலுமிச்சை சாறு முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

◆நெல்லிக்காய் மற்றும் வெந்தயம்:

நெல்லிக்காயில் வைட்டமின் C நிறைந்துள்ளது. மேலும் வெந்தயத்தில் பல சத்துக்கள் உள்ளன. இவ்வளவு போஷாக்குகள் நிறைந்த நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் முடி வளர்ச்சியை தூண்டி இளநரையை தடுக்கிறது.

◆கருவேப்பிலை:

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை போட்டு, எண்ணெய் கருப்பாக மாறி வரும் வரை இருக்கட்டும். இதனை ஆற வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலை முழுவதும் தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். இதனை வாரத்தில் 2-3 முறை செய்ய வேண்டும். வைட்டமின் B நிறைந்த கருவேப்பிலை முடிக்கு தேவையான மெல்லமைனை அளித்து நரையை தடுக்கிறது.

◆மருதாணி மற்றும் காபி பொடி:

இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காபி தூளை போடுங்கள். இது ஆறிய பிறகு மருதாணியுடன் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளலாம். பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலைமுடியில் நன்றாக தடவி கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசி கொள்ளலாம். 

◆பிளாக் டீ:

ஒரு கப்  தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி டீ தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பை சேர்த்து கொதிக்க விடவும். சில நிமிடங்களுக்கு பிறகு இதனை ஆற வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும். இந்த நீரை ஏற்கனவே அலசிய முடியில் தடவிக் கொள்ளுங்கள். இது உங்கள் முடியை கருமையாக மாற்றுவதோடு பளபளப்பாகவும் மாற்றுகிறது.