வர்த்தக ஒப்பந்தம் : அமெரிக்க சீன நாடுகள் உடன்படிக்கை

8 November 2019, 7:51 am
USC-UPDATENEWS360
Quick Share

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கும், இடையில் யே நடக்கும் வாணிப ரீதியிலான வர்த்தக போரானது தற்போது ஒரு நிரந்தர தீர்வை நோக்கி வர இருப்பதாக எதிர்பார்ப்புக்கள் எழுந்துள்ளது. அமெரிக்கப் பொருட்களின் மீது செலுத்தும், புதிய வரிவிதிப்புகளை ஒவ்வொரு கட்டமாக குறைப்பதற்கு தற்போது, சீனா அமெரிக்காவுடன் உடன்பட்டு இருப்பதாக, சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்திகுறிப்பு தகவல் தெரிவிக்கின்றது.

அமெரிக்க மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான, வர்த்தக ஒப்பந்தமானது டிசம்பர் 15-ம் தேதியன்று கையெழுத்திடப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது, அமெரிக்காவும் சீன கணினிகள், லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் பொம்மைகள் மீது சுமத்திய 150 பில்லியன் டாலர்கள் கொண்டிருக்கும் கட்டணங்களை ரத்து செய்ய உறுதி அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சீன அமெரிக்க நாடுகளுக்கு இடையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுமானால், முக்கியமாக பரஸ்பர வரி விதிப்புகளைக் குறைப்பது தான் பிரதான நோக்கமாக இருந்திடக்கூடும். அதன் மூலமாக, முதற்கட்ட வாணிப ஒப்பந்தமானது சாத்தியம் தான், என சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான காவோ ஃபெங் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான கட்டணக் குறைப்புக்கு காலவரிசை பற்றி சீனா எதனையும் தெரிவிக்கவில்லை. முதற்கட்டமாக இரு நாடுகளும் பரஸ்பர கூடுதல் கட்டண விதிப்புகளை அகற்றுவது பற்றிய ஒப்பந்தமானது, பொதுவான இடத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபரான ஜீ ஜின்பிங்கிற்கும் இடையில் நடைபெறும் என இருதரப்புக்கும் நெருக்கமான வட்டாரத்தின் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

வருகின்ற டிஸம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெறவுள்ள, நாட்டோ மாநாட்டில் ட்ரம்ப் கலந்து கொள்ளும்போது, இரு நாட்டின் தலைவர்களும், முதற் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகின்றது.

Leave a Reply