சீன முதலீட்டாளர்கள் முழுமையாக வெளியேற்றம்..! முழு ஆத்மநிர்பராக மாறிய “கூ” செயலி..!

Author: Sekar
18 March 2021, 5:16 pm
koo_app_updatenews360
Quick Share

தற்போதுள்ள முதலீட்டாளர்கள், ஒரு சில முக்கிய இந்தியர்களுடன் சேர்ந்து, ட்விட்டரின் உள்நாட்டு போட்டியாளரான கூ செயலியின் தாய் நிறுவனமான பாம்பினேட் டெக்னாலஜிஸில் சீன துணிகர மூலதன நிறுவனமான ஷன்வே கேப்பிட்டல் கொண்டிருந்த குறைந்தபட்ச பங்குகளை வாங்கியுள்ளனர். 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத், புக் மைஷோ நிறுவனர் ஆஷிஷ் ஹேம்ராஜனி, உதான் இணை நிறுவனர் சுஜீத் குமார், பிளிப்கார்ட் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜீரோதா நிறுவனர் நிகில் காமத் ஆகியோர் ஷன்வே கேப்பிடலின் பங்குகளை வாங்குவதற்காக முன்வந்துள்ளனர் என கூ செயலி தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

பாம்பினேட் டெக்னாலஜிஸில் ஷன்வே கேப்பிடல் 9 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“முன்னர் கூறியது போல, நாங்கள் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு வோகலுக்காக நிதி திரட்டிக் கொண்டிருந்தபோது, ​​எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தபின் சுமூகமாக வெளியேறுவதற்கு ஷன்வே கேப்பிட்டலுடன் தற்போது கலந்துரையாடினோம். இதையடுத்து தற்போது கூ செயலியின் தாய் நிறுவனமான பாம்பினேட் டெக்னாலஜிஸில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டார்கள்.” என்று தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கூ செயலியின் இணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்தியாவிற்கும் உலகத்துக்கும் ஒரு சுயசார்பு செயலியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் கூ, இதற்கு முன்னர் சீன நிதித் தொடர்புகள் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

40 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட கூ, இந்திய மொழிகளில் வெளியாகும் மைக்ரோ பிளாக்கிங் தளமாகும். பயனர்கள் பல இந்திய மொழிகளில் உரை, ஆடியோ அல்லது வீடியோவைப் பயன்படுத்தி தங்கள் எண்ணங்களை எளிதில் உருவாக்கி அவற்றை சமூகத்துடன் பெருமளவில் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பயனர்களைப் பெறுவதே இந்நிறுவனத்தின் நோக்கம் என்று கூ இணை நிறுவனர் மயங்க் பிதாவடகா முன்பு தெரிவித்திருந்தார்.

Views: - 204

0

0