வீட்டு உபயோக கேஸ் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
6 October 2021, 10:26 am
Indane Gas - Updatenews360
Quick Share

சென்னை: வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15 ரூபாய் உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக வைத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன.

Gas Cylinder - Updatenews360

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் 36.50 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இதனையடுத்து, வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்ந்து, ரூ.915.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

LPG_Gas_UpdateNews360

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கோரிக்கையாகும்.

Views: - 305

0

0