ஏழ்மையில் சிக்கிய ஏழைகளின் ஆப்பிள்! அவல நிலையால் விவசாயிகள் கவலை!!

27 August 2020, 6:59 pm
Pear - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய்கள் விலை இல்லாததால் விவசாயிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பேரிக்காய்கள் அதிகமாகவிளைகின்றன கொடைக்கானலில் முக்கிய விவசாயப் பகுதிகளான பள்ளங்கி, வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர் ஆகிய பகுதிகளில் இயற்கையாகவே விளைகிறது.

இந்த பேரிக்காய்கள் நாட்டு பேரி , ஊட்டி பேரி, வால் பேரி என பல்வேறு சுவைகளில் விளைகின்றன. இந்த பேரிக்காய்களை தமிழகம் மட்டுமின்றி கேரளா ,ஆந்திரா ,கர்நாடக ஆகிய வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்வது வழக்கம்.

தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்வதால் வெளிமாநிலங்களுக்கு பேரிக்காய்கள் மிக குறைந்த அளவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்கின்றனர்.கடந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு 35 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் பேரிக்காய் கிலோ 12 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இதனால் சில விவசாயிகள் பேரிக்காய்களை குப்பையில் கொட்டி வருகின்றனர் தற்போது பேரிக்காய் விவசாயத்தில் பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளதால் பேரிக்காய் விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பேரிக்காய் விவசாயிகள் மற்றும் பேரிக்காய் குத்தகைதாரர்கள் மிக பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது