ஜூலை 22 முதல் இந்தியாவில் புதிய டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி தடை

15 July 2021, 12:29 pm
Mastercard can’t issue new cards from July 22 RBI
Quick Share

மாஸ்டர்கார்டு ஆசியா / பசிபிக் பிரைவேட் லிமிடெட் (Mastercard) நிறுவனம் புதிய டெபிட், கிரெடிட் அல்லது ப்ரீபெய்ட் கார்டுகளை புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி (RBI) புதன்கிழமை தடை விதித்துள்ளது. புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர்கார்டு மீதான தடை ஜூலை 22 முதல் அமலுக்கு வருகிறது.

கட்டண அமைப்புகளின் தரவுகளை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக கட்டண சேவை நிறுவனத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதுமான கால அவகாசம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கிய போதிலும், பணம் செலுத்தும் முறை தொடர்பான தரவுகளை இந்தியாவில் சேமிப்பதற்கான வழிமுறைகளை இந்த நிறுவனம் எடுக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த தடையினால் மாஸ்டர்கார்டின் தற்போதைய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

Views: - 220

0

0

Leave a Reply