தட்டுப்பாடின்றி கிடைக்க நாளொன்று ஒரு லட்சம் மாஸ்க்குகளை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

24 March 2020, 11:12 am
mask - updatenews360
Quick Share

டெல்லி : கொரோனா வைரஸை சமாளிக்க உதவும் மாஸ்க்குகள் (முகக்கவசம்) தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், நாளொன்றுக்கு ஒரு லட்சம் மாஸ்க்குகளை பிரபல தனியார் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தற்காப்பு பொருட்களான சான்டினைசர் மற்றும் முகக் கவசங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டினை பயன்படுத்தி, சில தனியார் விற்பனை நிறுவனங்கள், சான்டினைசர் மற்றும் முகக் கவசங்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி விற்று வருகின்றன. உயிர்பீதி காரணமாக பொதுமக்களும் அதிகவிலையை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், சட்டவிரோத விலை விற்பனையை தடுக்கவும், தட்டுப்பாடின்றி கிடைக்கும் விதமாகவும், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் முகக் கவசங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, முகக்கவச உற்பத்தியை ஒரு நாளைக்கு ஒரு லட்சமாக உயர்த்தியுள்ளோம். மேலும், தங்களது நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், மும்பை மருத்துவமனையில் 100 படுக்கைகளை கொண்ட, இந்தியாவின் முதல் கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை பிரிவை ஏற்படுத்தியுள்ளோம்.

RELIANCE-UPDATENEWS360

மேலும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும். தங்களின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைதடைபட்டாலும், ஊதியம் வழங்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply