சௌத் இந்தியன் வங்கியின் வருவாய் நிலவரம்.!!

29 June 2020, 7:09 pm
South Indian Bank -Updatenews360
Quick Share

தனியார் துறையை சேர்ந்த சௌத் இந்தியன் வங்கி கடந்த நிதியாண்டில் ஈட்டிய வருவாய் அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் தனியார் துறையை சேர்ந்த சௌத் இந்தியன் வங்கி ரூ.2,341.88 கோடி வருவாய் பெற்றது. இதே போல 2018-19 நிதியாண்டின் இதே மார்ச் காலாண்டில் பெற்ற தொகையை ஒப்பிடும் போது இது அதிகமாகும்.

இதே வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால், அதில் கிடைத்த வருமானம் ரூ.723.80 கோடியாக உள்ளது என பங்குச்சந்தையிடம் சௌத் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் வங்கியின் முழு வருவாய் ரூ.7,602.73 கோடியில் இருந்து ரூ.8,809.55 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் நிகர லாபம் ரூ.247.53 கோடியில் இருந்து 58 சதவீதம் சரிவடைந்து ரூ.104.59 கோடியாக இருந்தது. தற்போது மொத்த வாராக்கடன் 4.92 சதவீதத்தில் இருந்து 4.98 சதவீதமாகவும், வாராக் கடன் விகிதம் 3.45 சதவீதத்தில் இருந்து 3.34 சதவீதமாகவும் இருந்தது என வங்கி தெரிவித்துள்ளது.