செடியிலேயே கருகிய செண்டு மல்லி பூ.!!இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

6 May 2020, 6:58 pm
Theni Flower -Updatenews360
Quick Share

தேனி : 144 தடை உத்திரவால் பூ மார்க்கெட் முடங்கியதால், பயிரிட்ட நிலத்திலேயே செண்டு மல்லிப் பூக்கள் கருகி விழுவதால் விவசாயிகள் அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம், பகுதியில் செண்டு மல்லிப்பூ பயிரிடப்பட்டு பூத்துக் குலுங்கிய நிலையில். இந்தப் பூவிவசாயக் காலம் ஆறு மாதப் பயிராகும், நிலத்தைப் பண்படுத்தி,நாற்று நடவு செய்து, களையெடுத்து , பராமரித்துமுறையான காலத்தில் தண்ணீர் பாய்ச்சி பக்குவமாக செய்யப்படும் விவசாயப் பயிராகும். வழக்கமாக சித்திரை மாதம் திருவிழாக்காலம் என்பதால் பொதுவாக பூ, வகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் குறிப்பாக இவ்வகைப் பூக்களுக்குதிருவிழாக் காலத்தில் மாலைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது செண்டு மல்லிப்பூ வகை தான் அதிகம் பயன்படுத்தப்படும்.

இந்தக் காலங்களில், தட்ப,வெப்ப சூழலில் ஒரு சில இடங்களில் இந்தப் பருவகாலத்தில்செண்டுமல்லிப்பூ, ரகம் அதிகம் பயிரிடப்படுவதில்லை. இதனால் நல்ல விலை கிடைக்கும். நல்ல லாபம் ஈட்ட முடியும். இந்நிலையில், நல்ல பூ விளைச்சல் இருந்தும், பூப்பறிக்கும் (அறுவடைக்காலம்) நேரத்தில் கொரொனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக தமிழக அரசு 144, தடை உத்திரவு விதித்திருக்கும் நிலையில்பூ, மார்க்கெட் முடங்கி, முற்றிலும் இயங்காததால், பூத்துக் குலுங்கியிருந்த பூக்களைப் பறித்து விற்பனை செய்ய இயலாததால் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்தும் பலனில்லாமல், செண்டுமல்லிப்பூ பயிரிடப்பட்ட நிலத்திலேயே செடியுடன்,கருகி உதிர்கிறது.

இதனை பார்க்கும் போது வாழ்க்கையைத் தொலைத்த வேதனையில் நிலத்தின் பக்கமே செல்ல மனமில்லை என்பதோடு, வாங்கிய கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது, கடனில் இருந்து எப்படி மீளுவது என வழி தெரியாமல் விழி பிதுங்குவதாக பூ, பயிட்டவிவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பயிரிட்ட விவசாயம் பாழாகிப் போனதாக மனம் வெதும்பி விவசாயிகள் ஏக்கப் பெருமூச்சு விடும் அதே வேளையில், தமிழக அரசுதோட்டக்கலைத் துறை மூலம் பூ விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கி உதவினால் நாங்கள் ஓரளவு கடனைத்திருப்பிச் செலுத்தி மீண்டும் வேறுவிவசாயம் செய்ய வாய்ப்பிருப்ப தாகவும் தெரிவிக்கின்றனர்.