பாழாய் போன பாகற்காய்.! வருமானம் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள்.!!

13 May 2020, 1:23 pm
Bitter Gourd - Updatenews360
Quick Share

திருவண்ணாமலை : பாகற்காய் பயிர் அறுவடை செய்யாமல் அழுகிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தில் பாகற்காய் பயிர் பயிரிட்டு வந்தனர். ஆனால் தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவால் அறுவடை செய்ய முடியாமல் நிலத்திலேயே அழுகிய நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு கோடை மழை பரவலாக பெய்தால் விவசாயி வேலு என்பவர் ரூபாய் 50 ஆயிரம் வரை செலவு செய்து தனது 50 சென்ட் விவசாய நிலத்தில் 6 மாத பயிரான பாகற்காய் பயிர் பயிரிட்டுள்ளார். இது இரண்டு மாதத்திற்கு பிறகு அறுவடை பணி தொடங்கும் என்கின்றார்.

ஆனால் தற்போது அறுவடை பணியின் போது கொரோனா வைரஸ் தாக்குதலாலும் மத்திய, மாநில அரசுகள் 144 ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்த பாகற்காய்களை அறுவடை செய்யாமல் அழுகிய நிலையில் நிலத்திலே இருப்பதால் விவசாயிகளின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி விவசாயி வேலு கண்ணீரோடு தெரிவிக்கின்றார்.

இதனால் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பார்வையிட்டு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழி செய்ய வேண்டும் என விவசாயி வேலு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.