நடிகர் சங்க அதிகாரி நியமனத்திற்கு எதிரான வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!

8 November 2019, 7:55 pm
vishal
Quick Share

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது தபால் வாக்குகள் சரியான முறையில் எண்ணப்படவில்லை எனவும் தேர்தல் சரியாக நடத்த பட வில்லை எனவும் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகர் சங்கத்திற்கான அதிகாரியின் நியமனத்திற்கு எதிராகவும் வழக்கு போடப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்னும் நடிகர் சங்க பிரச்சனைகள் எல்லாம் முடியாத நிலையில் அதிகாரி நியமனம் தேவையற்றது என வாதிட்டார். பின் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தற்போது நடிகர் சங்கத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் நிர்வாக வசதிக்காக அரசு தரப்பிலிருந்து அதிகாரி நியமிக்கப்பயிருக்கிறார் என கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 14ம் தேதிக்குள் இதற்க்கு அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து.

Leave a Reply