யாரு இவங்க?..  அச்சு அசல் சமந்தா மாதிரியே இருக்காங்க.. போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

Author: Vignesh
18 March 2023, 12:00 pm
Quick Share

மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.

Samantha - Updatenews360

ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

samantha - updatenews360

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

samantha- updatenews360

விவாகரத்துக்கு பின் பல மாதங்களாக சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் கடுமையான வலியும் கஷ்டத்தையும் சந்தித்து வந்தார். சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டு வரும் சமந்தா இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார்.

samantha - updatenews360

நடிகர், நடிகைகளை போலவே வேடமிட்டு, அவர்களுடைய ரசிகர்கள் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா அவரது திருமணத்தில் எப்படி ஆடை அணிகலன்கள் அணிந்திருந்தாரோ, அதே போல் அச்சு அசல் அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

samantha - updatenews360

இவர்களுடைய இரு புகைப்படங்களை ஒன்றாக இணைத்து ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

samantha - updatenews360
Views: - 2302

78

32