“உன் உயிர் தோழன் என் முருகனை.. விட்டுவிட்டு….” – நடிகர் விவேக்கின் நெருங்கிய நண்பரான செல் முருகன் பதிவிட்ட உருக்கமான பதிவு..!

19 April 2021, 4:57 pm
Quick Share

நடிகர் விவேக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் விவேக் சனிக்கிழமை உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகை மட்டுமல்லாது பாமர மக்கள் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவர் நம்மை விட்டு பிரியவில்லை என்று சொல்லுமளவு அவரது பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விவேக்கின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தற்போது அவருடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்த செல் முருகன், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குமுறல்களை வெளியிட்டுள்ளார். செல் முருகன் பல ஆண்டுகளாக விவேக்குடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். வையாபுரி மூலம் விவேக்கிற்கு அறிமுகமான செல் முருகன், அவரிடமே மேலாளராக இருந்துள்ளார். கொரோனா தடுப்பூசியை விவேக்குடன் இணைந்து இவரும் போட்டு கொண்டார். அவரின் இறுதி சடங்கில் வழி தெரியாமல் முழிக்கும் குழந்தை போல, பாவமாய் நின்றார்.

தற்போது ட்விட்டரில் அவர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “ஓர் மரணம் என்ன செய்யும்
சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்
சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்
சிலர் RIPபுடன் கடந்த போவார்கள்
சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்
சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்
ஆனால் அண்ணா… உண்மையான ஜீவன் உன் உயிர் தோழன் என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே! இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்! இனி என் முருகனுக்கு யார்? துணை விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்? இனி அவனுக்கு யார்? துணை..
யார்? துணை….
யார்? துணை…… என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். அது மட்டுமின்றி, ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகிறார்கள்.

Views: - 187

1

0