அக்கா, தங்கையை மணமுடித்த பிரபல வாரிசு நடிகர் : காரணம் கேட்டா ஷாக் ஆயிருவீங்க…!

Author: Rajesh
5 February 2023, 8:30 pm
Quick Share

80ஸ், 90ஸ் காலகட்டங்களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். சிவாஜி, எம்ஜிஆர் போன்றோர் கொடிகட்டி பறந்த சமயம் பிரபலமாக இருந்த முத்துராமன் அவர்களின் மகன்தான் கார்த்திக். தனது நடிப்பு மற்றும் பேச்சின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ‘நவரச நாயகனாக’ இன்றும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமான இவர், நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்களில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்ற இவர், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இப்படிபட்ட நிலையில், 1998ம் ஆண்டு “சோலைக்குயில்” என்ற படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ராகினியை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் – ராகினி தம்பதிக்கு கவுதம் கார்த்திக் மற்றும் கையன் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

பின்னர் சில வருடங்கள் கழித்து, தனது முதல் மனைவியின் தங்கை ரதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு திரன் கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், தற்போது திடீரென, இவரது முதல் மற்றும் இரண்டாம் மனைவியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கார்த்தியின் முதல் மனைவியின் மகனான கெளதம் கார்த்திக், தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வருகிறார். இவர் கடந்த ஆண்டு மஞ்சுமா மோகன் அவர்களை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 347

8

6