6-வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் 80-களின் பிரபல காமெடி நடிகர்..! உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
Author: Vignesh27 நவம்பர் 2022, 12:45 மணி
சமீப காலமாக காமெடி நடிகராக கலக்கி வந்த பல நடிகர்கள் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டு வருகின்றனர். அப்படி தன்னுடைய காமெடியால் தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் நடிகர் வடிவேலு . இவர் தற்போது பல வருடங்கள் கழித்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவரைத் தொடர்ந்து நடிகர் சந்தானமும் ஏஜென்ட் கண்ணாயிரம், கிக் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் போட்டியாக முன்னணி காமெடி நடிகர் ஒருவர் ஹீரோவாக களம் இறங்க உள்ளாராம்.
அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் கவுண்டமணி தான். 80, 90 கால கட்டங்களில் முன்னணி காமெடி நடிகராக, கொடி கட்டி பறந்து வந்தவர் நடிகர் கவுண்டமணி. மேலும் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், விஜய், அஜித் என இரண்டு தலை முறை நடிகர்களுடனும் காமெடியனாக நடித்திருக்கிறார் . அதுவும் காமெடியன்க ளிலேயே அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் கவுண்டமணி மட்டும் தான்.
இப்படி தொடர்ந்து நடித்து வந்த கவுண்ட மணி ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் 49 ஓ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தும் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை.
இந்நிலையில் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் கவுண்டமணி . அந்த வகையில் பேய காணோம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் அன்பரசன் இயக்க உள்ள பழனி சாமி வாத்தியார் என்ற படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
மேலும் விரைவில், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆறு வருடங்கள் கழித்து கவுண்டமணி ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
0
0