விஜயின் எதிரி கட்சியான பாஜகவில் சேருகிறாரா விஜய்யின் தந்தை?

Author: Udayachandran
13 October 2020, 1:13 pm
Vijay Dad - Updatnews360
Quick Share

என்ன கால நேரமோ என்று தெரியவில்லை பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் கூட குஷ்பு இந்த காட்சியில் இணைந்துள்ளார். இன்னும் ஒரு சில பிரபலங்கள் இணையப் போவதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புரட்சி தளபதி விஷால், சமுத்திரகனி உள்பட இன்னும் ஒரு சில திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைய போவதாக வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று காலை முதல் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பாஜகவில் சேர இருப்பதாக திடீரென சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பியது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். தான் பாஜகவில் சேரப்போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Views: - 44

0

0