அவரு ரொம்ப வெக்கப்பட்டாரு.. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி..- ஓப்பனாக பேசிய ஆண்ட்ரியா..!
Author: Vignesh23 December 2023, 11:45 am
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழில் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.
இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. காதல் தேல்விக்கு பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார்.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம் வடசென்னை படத்தில் இயக்குனர் உங்களுடன் ரொமன்ஸ் காட்சியில் நடிக்க கஷ்டப்பட்டாராம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆண்ட்ரியா ஆமா வெட்கப்பட்டார். அப்போ நான் நினைச்சேன் நான்தான் பொண்ணு நானே வெட்கப்படல ஏன் இவரெல்லாம் வெட்கப்படுகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவருக்கு படங்களில் லவ் சீன் அதிகமா நடிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இல்லாததால் அப்படி இருந்திருக்கலாம். எனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு எனக்கு பரவால்ல என்று கலகலப்பாக பேசியுள்ளார்.