ஏற்கெனவே ஒரு தடவை சமாளிச்சாச்சு, இப்போ இரண்டாவது முறையாக தெலுங்கு நடிகருடன் joint அடிச்ச அஞ்சலி !

20 September 2020, 11:07 pm
Quick Share

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். ‘புயல் வேகத்துல போய்க்கிட்ருக்கன் குறுக்க எதுவும் மண்ணு லாரி வந்துடக்கூடாதுடா சாமி ‘ என்று வடிவேலுவின் வசனம் போல் தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து கொண்டு இருந்த அவர் தனது வளர்ப்பு தாய் மீது பணத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டிவிட்டு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். போனவ ! போனவ ! அதன் பிறகு, பிரபல நடிகர் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

இந்நிலையில், இவர் 60 வயதாகும் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா அவர்களோடு நடிக்கிறார். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா, நயன்தாரா, கேத்ரின் தெரசா என பல நடிகைகளை கேட்டு பார்த்தார்கள்,

பாலகிருஷ்ணா பெயரை கேட்டதும் பின் வாங்கி விட்டார்கள். இறுதியில் அஞ்சலிக்கு 1 கோடி கொடுத்து ஹீரோயின் ஆக கமிட் செய்துள்ளார்கள். இவர் ஏற்கனவே அவருடன் Dictator எனும் படத்தில் நடித்த உள்ளது ஒரு குறிப்பிடத்தக்க தகவல்.