பஞ்சுமிட்டாய் கணக்கா இருக்கே..! சார்மி வெளியிட்ட புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்

Author: Udhayakumar Raman
17 September 2021, 6:58 pm
Quick Share

சார்மீயை கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு பார்த்தது. தற்போது அவர் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மி.

இப்படத்தைத் தொடர்ந்து சுறுசுறுப்பு மன்னன் சிம்பு நடிப்பில் வந்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார். தெலுங்கு மற்றும் தமிழில் லாடம் உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை சார்மி. தற்போது புதிதாக ஒப்பந்தமாகி உள்ள தெலுங்கு படத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளாராம் சார்மி.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி அப்டேட்டில் இருக்க முயற்சி செய்து வரும் சார்மி தற்போது வெள்ளை நிற ஆடையில் கும்மென்று போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பஞ்சுமிட்டாய் மாதிரி இருக்கே என வர்ணித்து வருகின்றனர்

Views: - 818

41

4