இரவு 12 மணிக்கு மீனா வீட்டில் குவிந்த தோழிகள்… இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப்போன குடும்பம் (வீடியோ)

Author: Shree
16 September 2023, 10:46 am
meena
Quick Share

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மீனாவுக்கு சினிமா துறையில் நிறைய நடிகைகள் தோழிகளாக இருக்கிறார்கள். மீனாவின் கணவர் இறந்தபோது கூட அவர்கள் எல்லோரும் வந்து மீனாவுக்கு ஆறுதல் கூறி அரவணைத்தனர்.

இந்நிலையில் இன்று தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடும் மீனாவிற்கு செம சர்ப்ரைஸ் ஆக அவரது தோழிகள் இரவு 12 மணிக்கு அவரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக ரசிகர்களும் மீனாவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Views: - 293

0

0