ரெயின்போ கலருகாரி….! மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் ரவீணா தாஹா
Author: kavin kumar31 October 2021, 8:53 pm
இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்.
ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.
அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ரசிகர்களுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டு தாராள மனசு காட்டி வருகிறார் அம்மணி.
1
0