நயன்தாராவை போல் எமோஜி சேலஞ்ச் வீடியோவை வெளியிட்ட த்ரிஷா…!

26 March 2020, 4:02 pm
Quick Share

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 96 திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. இவர் தற்போது, பரமபத விளையாட்டு, ராங்கி திரைப்படங்களில் நடித்து அதன் திரையிடலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

Trisha यांनी वर पोस्ट केले रविवार, २२ मार्च, २०२०


சமீபத்தில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலனான விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து எமோஜி சேலஞ்ச் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த விடீயோவிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதனையடுத்து நடிகை த்ரிஷா அதே பாணியில் ஒரு எமோஜி சேலஞ்ச் வீடியோ ஒன்றினை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.


அதுமட்டுமின்றி தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும்படி கூறும் ஒரு வீடியோ ஒன்றினையும் இணையதளத்தில் வெளியாகியுள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply