வயசு 40 ஆகியும் குறையாத மவுஸ்… திரிஷாவின் முழு சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
8 February 2024, 1:43 pm
trisha - updatenews360 1
Quick Share

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

trisha - updatenews360 1

தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். ஆனால் திரிஷாவோ சிம்பு மற்றும் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.

இதனிடையே வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் நின்றுபோனது. இதனால் திருமண வாழ்க்கையே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக தற்போது நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

trisha krishnan - updatenews360

இந்நிலையில் 40 வயதாகும் திரிஷாவின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 3 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கும் திரிஷாவின் முழு சொத்து மதிப்பு ரூ. 85 கோடி முதல் ரூ. 100 கோடி இருக்குமாம். தொடர்ந்து அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையாக இடம்பிடித்துள்ளார்.

Views: - 178

0

0