“ஹைபிரிட் தக்காளி” – ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு அதிதி ராவ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் !

15 April 2021, 1:57 pm
Quick Share

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

சமீபத்தில், இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சிலது இணையதளத்தை பரபரப்பாகி உள்ளது. அதிலும் பஜார் என்ற பத்திரிக்கைக்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அதிதி ராவ், மிகவும் ட்ரான்ஸ்பரெண்ட் டிரஸ் அணிந்து இளசுகளை சூடேற்றி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் “கிளாமர் குயின் – ஹைபிரிட் தக்காளி” என எக்குதப்பாக வர்ணித்து கமென்ட் எழுதி வருகிறார்கள்.

Views: - 27

5

1