இதுதான் தல அஜித்தின் What’s App Dp-யாம், வைரலாகும் புகைப்படம் !

29 August 2020, 6:00 pm
Quick Share

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றே கூறுவது இல்லை. இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித்.

தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர். வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்திகொண்டிருந்த அஜித் தன்னுடைய மனைவி, மகள், மகன் அவர்களுடன் மட்டும் ஜாலியாக இருப்பார்.

தற்போது தல அஜித்தின் Update எதுவும் வராமல் இருக்கும் ரசிகர்களுக்கு, அஜித்தின் நண்பர் ஒருவர், இதுதான் தல அஜித்தின் What’s app DP என்று ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. சொல்லப்போனால் தமிழ் நடிகர்களில் OFF Screen இல், Hollywood நடிகர் போல் இருப்பது தல அஜித்தான், அப்படிங்கிற ரேஞ்சுக்கு கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.